மும்பை:

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்த சுற்றுப்பயணம் வெற்றி கரமாக அமைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
நியூசிலாந்து பயணத்தில் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் முதல் முறையாக வென்றது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து இரண்டு 20 ஓவர் போட்டி, மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

20 ஓவர் ஆட்டம் வருகிற 24 மற்றும் 27-ந்தேதிகளில் விசாகப்பட்டினம், பெங்களூரில் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13-ந்தேதிகளில் ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, டெல்லி ஆகிய இடங்களில் முறையே நடக்கிறது.

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு மும்பையில் நாளை நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கூடி வீரர்களை தேர்வு செய்கிறது.

இந்த தொடரில் முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. துணை கேப்டன் ரோகித்சர்மா தொடர்ந்து விளையாடி வருவதால் 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம்.

இதேபோல தவானுக்கும், சில ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இடத்தில் கே.எல்.ராகுல், ரகானேக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

நியூசிலாந்து பயணத்தில் பாதியில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் வீராட்கோலி அணிக்கு மீண்டும் திரும்புவார். 2-வது விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதில் ரிஷப் பண்ட்டுக்கும், தினேஷ் கார்த்திக்குக்கு இடையே போட்டி நிலவுகிறது. ரிஷப் பாண்ட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடரில் விளையாடாத பும்ரா அணிக்கு மீண்டும் திரும்புகிறார். வேகப்பந்து வீரர்களும், சுழற்பந்து வீரர்களும் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here