மீஞ்சூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 3 மற்றும் 5 வது வார்டு ஜெகஜீவன்ராம் தெருவில் 30 திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் நிலபட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நிலபட்டா வழங்கக்கோரி வருவாய்த்துறை அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் நேற்று மனு அளித்து நடவடிக்கை எடுக்ககோரி தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து துரை சந்திரசேகர் அவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவாய்துறை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிகழ்வின் போது பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருடன் மீஞ்சூர் பேரூர் துணைத் தலைவர் அலெக்சாண்டர், மீஞ்சூர் நகர திமுக செயலாளர் தமிழ்உதயன், வார்டு உறுப்பினர் தன்ராஜ் மற்றும் உயர் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.





















