மீஞ்சூர், மார்ச். 17 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதிவாழ் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலை கடையை இப்பகுதியில் அமைத்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் அப்பகுதி வாழ் மக்கள் மனு அளித்திருந்தனர்.

அதனை ஆய்வு மேற்கொண்ட துரை. சந்திரசேகர் பொன்னேரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8.67 லட்சம்  மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமையேற்று வழி நடத்தினார். மேலும், ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், துணை தலைவர் கலாவதி மனோகர், உள்ளிட்டவர்கள் முன்னின்று விழா சிறப்படையச் செய்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பூமி பூஜையை நடத்தி வைத்தார், மேலும் இதில் வார்டு உறுப்பினர்கள் காதர் பாட்ஷா, ராம்தாஸ், கலாநிதி, சுரேந்தர், உள்ளிட்ட  திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here