திருவாரூர், பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் *உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்* தலைப்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் தமிழ்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது.
அக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற அமைச்சர்கள் ரகுபதி மற்றும் சிவசங்கர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
.அமைச்சர் ரகுபதி உரை நிகழ்த்தும் போது ED யையும் IT யையும் கொண்டு மிரட்டி ஊடகங்களையும் தங்கள் பக்கம் வைத்துள்ளார்கள். இதனால் ஊடகங்கள் மூலம் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றனர். 350 இடங்களில் வெற்றி பெறுவோம் என கருத்துக் கணிப்புகள் மூலம் மக்கள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் மக்கள் ஒன்றிய அரசுக்கு எதிரான மன நிலையில்தான் தற்போது இருக்கின்றனர் என்றார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் இந்துத்துவா கொள்கையை சொல்லி, இந்தியாவை மூழ்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள். மோடிக்கு தேர்தல் பயம் இருப்பதால்தான், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஐந்தாவது முறையாக அமலாக்கத்துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சட்டமன்றத்தில் ஆளுநர் முதலில் தேசியகீதம் பாட வேண்டாம் எனவும் மேலும் தமிழக சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடக்கூடாது எனவும் சொல்கிறார். அதனைச் சொல்ல இவர் யார்., என வினாவினார்.
அதற்காகத்தான் இன்று கூட்டம் தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து நமது கூட்டத்தில் பாடப்பட்டது. நமது பழக்க வழக்கங்கள் உடை, கலாச்சாரம் இவை அனைத்தையும் மாற்றிக்கொள்ள சொல்வதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழக்கம். எனவே வரவிருக்கின்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றியடைய செய்ய, திமுகவினர் மக்களிடம் மத்திய மோடி ஆட்சியில் நடைப்பெற்ற மக்கள் விரோத அவலங்களை எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.
வெகு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், நாகை திமுக மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் ,தாட்கோ தலைவர் மதிவாணன் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்று மேலும் சிறப்பு சேர்த்தனர்



















