மதுரவாயல், ஏப். 21 –
சென்னை கோயம்பேடு அருகே மதுரவாயல் விஜிபி அமுத நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 16 பைக்குகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தீயில் இருந்து நாசமாகியது.
அது தொடர்பாக கோயம்பேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு அவ்வழக்குக் குறித்து அக்காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் அப்பகுதியில் வசித்து வரும் 51 வயதுடைய ராமசந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தன்னை திட்டியவரை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அந்நபரின் பைக்கிற்கு குடி போதையில் தீயிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் அத் தீ பரவி தீயில் எரிந்து நாசமானதாக அப்போது காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவரை கோயம்பேடு காவல்நிலையப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர் மீது இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நேற்று அவரை சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். மேலும் அச்சம்பவம் தொடர்பான வீடியோக் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அது தற்போது வெளியாகிவுள்ளது. மேலும் அதில் பைக்குகள் எவ்வாறு எரிந்தது என்பது குறித்தப் படக்காட்சிகள் அப்பகுதியில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















