திருவள்ளூர், நவ. 14 –
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் கிராமத்தில் (14.11.2021) இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நெசவாளர் அணி சார்பில் முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்த நாள் விழா, நெசவாளர் அணி 4 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நெசவாளர் அணி செயற்குழு கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ் விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நெசவாளர் அணி தலைவர் G.N.சுந்தரவேல் B.Com.,LLB., தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் K.தணிகாசலம், குமரி K.மகாதேவன் உட்பட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இம்முப்பெரும் விழாவில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.