திருத்தணி, நவ. 14 –
இன்று திருத்தணி நகர 20வது வார்டு, சித்தூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் திமுக மாவட்ட செயலாளர் திருத்தணி எம்.பூபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன் ஆகியோரிடம் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி செய்து தரும் படி கோரிக்கை மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து திருத்தணி நகர கழக செயலாளர் வி. வினோத்குமார் மற்றும் பொறுப்பு குழு உறுப்பினர் திருத்தணி ஆ.சாமிராஜ் மற்றும் 20வது வார்டு முன்னால் நகர மன்ற உறுப்பினர் திருமதி. மகேஷ்வரிகமலக்கண்ணன் ExMc போன்றவர்களின் துரித நடவடிக்கையால் பழுதடைந்த குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்தி புதிய பைப்புகள் பொறுத்தப் பட்டு உடனடியாக அப்பகுதி மக்களின் குறைத் தீர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு கண்ட திமுக நிர்வாகிகளுக்கும் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.