சென்னை, ஜன. 5 –

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர் பகுதியில் மெட்ரோ ஜூஸ் எனும் பெயரில் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த மூன்றாம் தேதி நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து கல்லாப் பெட்டியின் முன்னால் அடிக்கி வைத்திருந்த பாட்டில்களை வெட்டி சேதப்படுத்தினர்.

அதைத் தடுக்க முற்பட்ட கடையில் இருந்த ஊழியரையும் வெட்ட முற்பட்டபோது கடை ஊழியர் சாமார்த்தியமாக தப்பித்துக் கொண்டதால், ஆபத்தில் இருந்து தப்பித்துள்ளார். பின்னர் கடையை அடித்து நொறுக்கிய அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் அருகிலுள்ள பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப் புகாரின் அடிப்படையில் பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டார்.

கடையில் பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றிய போலீசார் கத்தியால் வெட்டிக் சேதப்படுத்தி கடையை சூரையாடியவர்களை தேடி வந்த நிலையில் மேடவாக்கத்தை சேர்ந்த 19-வயதான மணி (எ)சூரை மணிகண்டன், சித்தாலப்பாக்கத்தை 40-வயதான சுரேஷ்எ) ஜிலேபி சுரேஷ், 21-வயதான சரண்ராஜ், சித்தாலப்பாக்கம் கண்ணிக்கோயிலை சேர்ந்த 34-வயதான சலீம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

நான்கு பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போது கஞ்சா போதையில் ஜூஸ் கடைக்கு சென்றதாகவும், தங்களை கண்டால் கடைக்காரனுக்கு பயம் ஏற்பட வேண்டும் என்று மணி(எ) சூரை மணிகண்டன் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து கடையை அடித்து நொறுக்கி சூரையாடினோன் என்று கூறியது தெரியவந்தது.

மேலும் சுரேஷ்(எ) ஜிலேபி சுரேஷ் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 35 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், மணி(எ) சூரை மணிகண்டன் மீது 3 கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சரண்ராஜ் மீது கஞ்சா உள்ளிட்ட இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது, சலீம் மீது சண்டை உள்ளிட்ட இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த பெரும்பாக்கம் போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here