மீஞ்சூர், மே. 13 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன்வாயில் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரியன்வாயல் பகுதியில் இன்று நடைபெற்றது. இப் பிரச்சாரத்திற்கு ஐபிபி மாவட்ட செயலாளர் எம்.ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் உசேன்அலி, மாவட்ட துணை செயலாளர்கள் யூசுப்அலி, காதர் பாஷா . மஸ்தான் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

பிரசாரத்தில் போதை ஒழிப்பு பற்றிய தகவல்கள் குறித்தும் நாளடைவில் போதையினால் ஏற்படும் குற்றங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இதில்  மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் இலியாஸ், சலீம் மாலிக், அப்துல் அஜீஸ், நாகூர் கனி, ஜெயிலா, முகமதுஅலி, காஜா, தஸ்தகீர், ஷாயின்ஷா, சாதிக், ஜோஸ்வா, அன்சாரி உள்ளிட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கலந்துகொண்டு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here