திருவள்ளூர், மார்ச். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி

திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசு குற்றச்சாட்டி தமிழகம் முழுவதிலும் மனித சங்கிலி கண்டனப் போராட்டங்களை நடத்த அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொண்டர்களுக்கு உத்திரவிட்ட நிலையில், அதனடிப்படையில் இன்று திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அதிமுகவின் சார்பில் பொன்னேரி அண்ணா சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப் போராட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் சிறுணியம்.பி.பலராமன் தலைமை வகித்தார்.

மேலும் அதில் 31 ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அக் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு போதைப் பொருளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசு மீதுக் குற்றம் சாட்டி அரசுக்கு எதிரான கண்டன மழக்கங்களை எழுப்பி அவர்கள் பொன்னேரி அண்ணா சிலையிலிருந்து ஆரம்பித்த மனித சங்கிலி ஊர்வலமாக தேரடி தெரு வழியாக சென்று புதியபேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து மீஞ்சூர் நகரத்திலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் 11 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 500 க்கும் மேற்பட்ட அக் கட்சியின் ஆண் மற்றும் பெண் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு நடைபெற்று வரும் திமுக அரசு போதைப்பொருள் புழக்கத்தை தமிழகத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திமுகவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி ஊர்வலத்தை நடத்தினர். அதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர் உள்ளிட்ட ஊராட்சி கழக செயலாளர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here