திருவள்ளூர், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மருதுபாண்டி…
திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை இன்று தமிழ்நாடு முழுவதும் அக்கடசியினர் பல்வேறு நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி மிகச் சாறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டிஜே கோவிந்தராஜன் அறிவுறுத்தலின் படி திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் பேரிட்டிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் வழக்கறிஞருமான தில்லைகுமார் தலைமையில் பூண்டி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் இன்று இரத்த தானம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ஸ்ரீராம் ஒன்றிய துணை செயலாளர் பால் சுதாகர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் விஜயன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமாராவ் துணை அமைப்பாளர்கள் எட்வர்ட்துறை ரஞ்சித் மாணவர் அணி அமைப்பாளர் தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினார்கள்.
ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.