கும்பகோணம், ஏப்ரல் . 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் அருகேவுள்ள கொரநாட்டுக்கருப்பூர் அபிராமி அம்பிகா உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் சித்திரை பெளர்ணமி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. அவ்விழாவல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சென்னை சாலையில் அமைந்துள்ள கொரநாட்டுக்கருப்பூரில், சோழ மன்னர்களின் ஆட்சியில் கிபி 1188 முதல் 1216 ஆண்டுகளில் அமைக்கப் பெற்ற அழகிய கற்கோயில் சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயிலாகும்.
மேலும் இத்தல விருட்ஷம் பாதிரி மரம் ஆகும். ஒரு சமயத்தில் கும்பகோணம் பகுதியில் பௌண்டரீக யாகம் செய்த போது அதில் இருந்து அமுதத் துளிகள் 10 மைல் தொலைவில் உள்ள 5 இடங்களில் விழுந்துள்ளது அவை தாராசுரம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், சுவாமிமலை மற்றும் கொரநாட்டு கருப்பூர் ஆகிய இடங்களாகும் என அத்தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும் இவை பஞ்ச குரோசத்தலங்கள் என போற்றப்படுகிறது இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் பிரம்மன், இந்திரன், குபேரன் உள்ளிட்ட தேவர்களும், அகத்தியர், சுரதன் உள்ளிட் முனிவர்களும் வழிப்பட்டு தங்கள் சாப விமோசனம் பெற்றுள்ளனர். இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என போற்றப்படுகிறது இதில் நீராடினால் பல யாகங்கள் செய்த பலன்களை உண்டு என்பது ஜதீகம். இத்தலத்தில் சுந்தரமாகாளி என்கிற பெட்டிக்காளி என்றும் பக்தியோடு போற்றப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தில் கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான இன்று அபிராமி அம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். 10 நாளான நாளை தீர்த்தவாரியுடன் இவ்வாண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.






















