பொன்னேரி, பிப். 13 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தலைமை ஆசிரியர் பத்மநாபன் தலைமையில் நடைப்பெற்றது.
மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி,ரவி, உதவி தலைமை ஆசிரியர்கள் டி.சி. அமிர்தராஜ், கே.சி.சுதா, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சசிகுமார், உள்ளிட்டவர்கள் அவ்விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.
அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் பங்கேற்று மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து, பதினோராம் வகுப்பு கல்வி பயிலும் 102 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
மேலும் அவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லதா, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் திருப்பாலைவனம் வினோத், கொண்டக்கரை கவுன்சிலர் ஆர்.எல். ரமேஷ், காங்கிரஸ் பரசுராமன் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் என திரளானவர்கள் பங்கேற்று மேலும் அவ்விழாவினை சிறப்படையச் செய்தனர்.



















