செங்குன்றம், மார்ச். 28 –
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மேலும் இவர் தனது தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.
மேலும் முருகேசன் எஸ் ஆர் பி டூல்ஸ் எனும் தனியார் கம்பெனியில் டிசைனராக வேலை பார்த்து வருவதாக தகவல் தெரிய வருகிறது. மேலும் இந்நிலையில் முருகேசன் ஆன்லைன் டிரேடிங் என்கின்ற வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வந்ததாகவும், அதில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு பல லட்ச ரூபாய் அதில் அவர் இழந்ததாகவும் தெரிய வருகிறது.
அதனால் அத்தொழிலுக்காக முருகேசன் அவரது உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் இடையே கடன் வாங்கி மீண்டும் அந்த தொழிலை செய்ய முயற்சித்த போது மீண்டும் கடன் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவருக்கு கடனாக கொடுத்தப் பணத்தை நண்பர்களும், உறவினர்களும் திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த கணவன் மனைவி இருவரும் அவர்களுக்கு சொந்தமான செங்குன்றம் அடுத்துள்ள எல்லையம்மன் பேட்டை பகுதியில் உள்ள அவர்களது வீட்டினை சுத்தம் செய்யப் போவதாக அவர்களது குடும்பத்தில் தெரிவித்துவிட்டு அங்கு வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் இருவரும் கடன் பிரச்சினை குறித்து பேசியதாகவும் மேலும் அவர்கள் ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த நிலையில் அப்பிரச்சினைக்கு தங்களால் எவ்வித முடிவெடுத்திடும் நிலை இல்லையென்பதை உணர்ந்ததாகவும் அதனால், தற்கொலை செய்துக் கொள்வதே அதற்கான தீர்வெனக்கருதி அதே வீட்டில் இருவரும் தனித்தனி கயிறு கொண்டு தூக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர் என தகவல் தெரிவிக்கிறது.
அதனைத் தொடர்ந்து வீட்டை சுத்தம் செய்ய போவதாக கூறிச் சென்ற வர்கள் வீட்டிற்கு திரும்ப வராததால் முருகேசனின் தந்தை அவர்களின் செல்போனை தொடர்பு கொண்ட போது அவர்களை செல்போனானது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பக்கத்து வீட்டுக்காரர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை தொடர்பு கொண்ட போது அவர் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர் அதுக்குறித்த தகவலை முருகேசனின் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கும் மகன் மற்றும் மருமகள் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். மேலும் இத்தகவலறிந்து வந்த செங்குன்றம் காவல்நிலைய போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






















