செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி

திருவண்ணாமலை, ஆக.18-

தமிழகத்தில் அரசு பொதுத்துறையில் உள்ள 4.50 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட கிளை செயலாளர் எஸ்.முரளி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாகவும் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அரசு ஊழியர் சங்கத்தினர் முழக்கமிட்டனர்.

மேலும் 27 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப் படி நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் உடனடியாக வழங்கவும் பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த கோரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊதவியாளர்கள் ஊர்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கக்கோரியும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வரன் முறைப்படுத்த வேண்டும்.

அரசு துறைகளில் காலியாக உள்ள 4.50 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ், கிராம சுகாதார செவிலியர் சங்க மாவட்ட செயலாளர் புனிதா கூட்டுறவு துறை அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைவர் தலைவர் ஆர்.தீபன்சக்கரவர்த்தி ஆகியோர் வலியுறுத்தி பேசினர்.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பார்த்திபன், மாவட்ட பொருளாளர் பா.வேங்கடராஜன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சி.சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் ஆனந்தன் மற்றும் சங்க நிர்வாகிகள் அரசு ஊழியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here