திருவண்ணாமலை, ஜூலை. 27-

பரவலாக்கபட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல், கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவராக உள்ள தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரவை செய்து பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி வழங்குவதற்கு ஏதுவாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட இம்மண்டலத்தில் உள்ள தனியார் அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரவை முகவராக நியமனம் செய்வது தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டலம் அலுவலகம், நெ.567, சிட்கோ காம்ப்ளக்ஸ், வேலூர் மெயின் ரோடு, வேங்கிக்கால், திருவண்ணாமலை – 606 604 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்.பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here