கும்பகோணம், ஆக. 22 –

கும்பகோணம் மாநகர வழக்கறிஞர் சங்கம், டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் துளசி பார்மசி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் கும்பகோணம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது.

இம் மருத்துவ முகாமில் பொது மருத்துவம் மற்றும் கண் மற்றும் செவித்திறன் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் குறிப்பாக இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, உடல் எடை, கண் மற்றும் செவித்திறன் குறித்த பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் இம்முகாமில் மேற் கொள்ளப்பட்டது.

மேலும் இம்முகாமில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்காக பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ பயானிகளை பரிசோதனை செய்து அதில் தொடர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பெற வேண்டிய பயனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பல்வேறு மருத்துவ மனைகளுக்கு அம்முகாம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. தொடர்ந்து அம்முகாமில் சிகிச்சைப்பெற்ற அனைத்து மருத்துவ பயனாளிகளுக்கும் இலவசமாக மாத்திரை மற்றும் மருந்தும் வழங்கப்பட்டது.

மேலும் இம் முகாமில் வழக்கறிஞர் சங்க செயலாளர் செல்வம், பொருளாளர் ராஜா, துணை தலைவர் ரவி, துணை செயலாளர் அருள், டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் பொறுப்பு Mcc.திருமுருகன், Rotary India Co-ordinator, செயலாளர் பாலாஜி, உதவி ஆளுநர் பாண்டிசெல்வி, திட்ட தலைவர் வேலவன், முன்னாள் தலைவர் சாந்தராமன், மூத்த வழக்கறிஞர்கள் கலியபெருமாள், ஆறுமுகம், ஆறுமுகசாமி, சக்கரம் பாணி, மற்றும் வழக்கறிஞர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான மருத்துவ பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here