ராமநாதபுரம், ஜூன்
ராாமநாாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மற்றம் திருப்புல்லாணி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பள்ளளிகல்வித்துறையின் சார்பாக நடைபெற்ற விழாக்களில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் 2227 மாணவ மாாணவியர்களுக்கு ரூபாய் 2 கோடியே 75 லட்சத்து 47 ஆயிரத்து 990 மதிப்பிலா தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். தொடர்ந்து , 136 அரசு மேல்்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்ரபில் விலையில்லா எச்டி செட்டாப் பாக்ஸ்களைள வழங்கினார். விழாவில் மாவாட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2019-2020ம் கல்வியாண்்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வழங்குவதற்காக ரூபாய் 5 கோாடியே 57 லட்சத்து 41 ஆயிரத்து 68 மதிப்பில் 9017 மாணாக்கர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் ஒதுக்கீ செய்யப்பட்டுள்ளன. அவற்றில் கடந்த வாரம் நடைபெற்ற விழாக்களில் பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி பகுதிகளில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 506 மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளன.
அதன்தொடர்ச்சியாக ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் ராமநாதபுரம் மற்றும் நயினார்ேகாவில் ஆகிய ஊரா்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10 பள்ளிகளை சேர்ந்த 1391 மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 1.72 கோடி மதிப்பில் திருப்புல்லாணி  அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 9 பள்ளிகளை சேர்ந்த 836 மாணவ மாணவியர்களுக்கு ரூ.2,227 மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 2 கோடியே 75 லட்சத்து 47 ஆயிரத்து 990 மதிப்பிலா தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.


விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கவனுத் திட்டான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டமானது தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய திருநாட்டில் ள்ள பிற மாநிலங்களுக்கும் முன்னோடியாக விளங்கும் வகையில் ஏறத்தாழ 54.5 லட்சம் மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் 15.5 லட்சம் விலையில்லா மடிக்கணினி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அதன்படி இன்றைய தினம் விழாக்களில் 19 பள்ளிகளை சேர்ந்த 2 227 மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 2.75 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மேலும் தற்போது 2019-2020 ஆண் கல்வியாண்டில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தற்போது விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 2018-19ம் கல்வியாண்டு மற்றும் 2017-18ம் கல்வி ஆண்டில் பயி்ற மாணவ மாணவியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி கட்டாயம் வழங்கப்படும்.
மேலும் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் ஊராட்சி அளவில் கிராமங்களை இணைய வழியில் ஒருங்கிணைத்து அரசு செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை பொது மக்கள் இணையவழியில் சிரமமின்றி பெற்று பயனடைய ஏதுவாக 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளை பைபர் ஆப்டிக்கல் தொழில்நுட்பத்தில் இணைய வழியில் ஒருங்கிணத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் கேபிள் டிவி ஒளிபபரப்பானது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொது மக்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளி கல்வி துறையின் மூலம் மாணவ மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை மேம்படுத்து் நோக்கில் கல்வி சார்ந் நிகழ்ச்சிகளை அரசு மல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ஒளிபரப்பிட ஏதுவாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் விலையில்லாமல் எச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 136 பள்ளிகளுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் இன்றைய தினம் வழங்கப்படுகின்றன.
மேலும் தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையில் பொது மக்கள் பாதிக்காத வகையில் குடிநீர் வினியோகம் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் எனது முயற்சியின் மூலம் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் உத்தரவின்பேரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு ராமநாதபுரம் பெரிய கண்மாய் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 64 கண்்மாய்களில் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதேபோல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 35 எம்எல்டி அளவில் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிது. காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் குடிநீர் ஆதாரம் என எந்த வகையிலும் தண்ணீர் வழங்க இயலாத கிராமங்களாக 45 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநர் பிரச்னை ஏற்பாடதவாறு தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
விழாில் பரமக்குடி எம்எல்ஏ சதன்பிரபாகர், மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரேம் (ராமநாதபுரம்), பால தண்டாயுதபாணி (மண்டபம்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள், பொது மக்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here