திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.. அப்போராட்த்தில் பங்கேற்ற தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அரசு கோரிக்கை ஏற்க மறுக்கும் பட்சத்தில் தொடர் போராட்த்தில் ஈடுப்பட திட்டம் வகுத்துள்ளதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
திருவாரூர், ஆக. 30 –
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனின் தலையீட்டின் காரணமாக, வட்டாட்சியர் மனோஜ் முனியன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பி தமிழ்நாடு வருவாய்துறை சங்கத்தினர் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் அப்போது அவர்கள் வட்டாட்சியர் மனோஜ் முனியனின் பணியிடை நீக்கத்தின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும்., உடன் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கண்டித்து. கோரிக்கை முழக்கங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அக்காத்திருப்பு போராட்டத்தில், பெண் ஊழியர்கள் உட்பட திருவாரூர் மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் அமர்ந்து, கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் தெரிவிக்கும் போது, கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியனின் தற்காலிக பணியை நீக்க உத்தரவை ரத்து செய்து உடன் பணி அமர்த்த வேண்டும் என்றும்.. மேலும் எங்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அப்போது தெரிவித்தார்.
பேட்டி: கே விஜய் ஆனந்த், மாவட்ட செயலாளர்
(தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம்.)





















