கும்பகோணம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 5 மதுபான கடையை துறை சார்ந்த நிர்வாகம் அகற்றவில்லை எனில் 5 மது பான கடைகளையும் அடித்து நொறுக்குவோம் என பாமக செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
பட்டீஸ்வரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு தெற்கு ஒன்றியம் சார்பில் செயல்வீரர் கூட்டம் மாவட்ட துணைச் செயலாளர் குமார், தலைமையில் அப்பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
அக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலின், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஜோதிராஜ், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சங்கர், மாவட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் தமிழரசன், ஐயப்பன், முருகானந்தம், கண்ணன், ஒன்றிய தலைவர் பிரசாத், சரவணன், மகளிரணி மாநில செயலாளர் பானுமதி சத்தியமூர்த்தி, ஒன்றிய தலைவர் சித்ரா, முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைராஜ், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் அதில் 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக உறுதியாக ஆட்சி அமைக்கும். அதற்கு ஒரு முன்னோட்டம்தான் 2024 ஆம் ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தல் என அக்கட்சியின் முன்னோடிகள் உரை நிகழ்த்தினார்கள்,
மேலும் அதனைத் தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியை ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த செயல்வீரர் கூட்டத்தில் நிறைவேற்றினார்கள்.
தொடர்ந்து மகளிரணி மாநில செயலாளர் பானுமதி சத்தியமூர்த்தி தெரிவித்த போது கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 5 மது பானம் கடைகள் உள்ளதைக்குறிப்பிட்டு, அந்த மதுபான கடைகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளதாக புகார் தெரிவித்த அவர். மேலும் அந்த மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் இல்லையென்றால் அனைத்து மகளிரை ஒன்று திரட்டி மதுபான கடையை அடித்து நொறுக்குவோம் என்று தெரிவித்தார்.






















