பொன்னேரி, அக். 03 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மெதூர் துணை மின் நிலையத்திலிருந்து அரசூர் .சோம்பட்டு, திருப்பாலைவனம். பழவேற்காடு. உள்ளிட்ட முப்பது கிராமங்களுக்கு மின் பகிர்மானம் நடைபெற்று வருகிறது.
இதனால் நாளடைவில் அடிக்கடி இப்பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு வருவதாகவும், இதனால் மின்சார பராமரிப்புகளுக்காக ஒரு சில கிராமங்களுக்கு பழுது நீக்கும் பணிகளில் மின்நிலைய ஊழியர்கள் பணிகளில் ஈடுபடும் போது, அனைத்து கிராமத்திலும், மின் தடை ஏற்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் அதற்கு தீர்வுக் காணும் விதமாக ஏலியம்பேடு மின் பகிர்மான நிலையத்திலிருந்து புதிய மின் சேமிப்பு 33 கிலேவாட் மின்அழுத்தம் கொண்ட பீடர் பாயிண்ட் டிரான்ஸ்பார்மரை ரூபாய் 1 கோடியே 90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் பயனாளர்களின் பயன்பாட்டிற்கு துவங்கி வைக்கும் நிகழ்ச்சி கடந்த அக் 1 ஆம் தேதி துணை மின் பகிர்மானம் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமை வகித்தார். மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி .ரவி. செயற்பொறியாளர் உதயகுமார். உதவி செயற்பொறியாளர்கள் நெடுமாறன். பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மின் விநியோகத்தை துவக்கி வைத்தார். மேலும் சிறப்பு அம்சமாக பஞ்செட்டி. கும்மிடிப்பூண்டியில். துரைநல்லூர். உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புதிய மின் ஒயர்கள் அமைக்கப்பட்டு மின்சாரத்தினை பெற்று மின்விநியோகம் நடைபெற்று வருகிறது. இதனால் மெதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் பொழுதும். மற்றும் மின் பழுது பார்க்கும் போதும் .ஏலியம்பேடு பகுதியில் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரில் இருந்து மற்ற கிராமங்களுக்கு தடையின்றி மின் விநியோகம் நடைபெறும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இந்நிகழ்வில் நிலைய அலுவலர் கௌதம். உதவியாளர் அருள்நாதன் உள்ளிட்ட ஊழியர்கள் பல உடனிருந்தனர்.




















