பொன்னேரி, சன. 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …

தமிழகத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப் கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி கடந்த 01.01.2024-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு பொன்னேரி கோட்டத்தில் அடங்கியுள்ள 2 சட்டமன்றத் தொகுதிகளின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியல் -2024, 22.01.2024 அன்று காலை 10.30 மணியளவில் பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரால் வெளியிடப்பட்டது.

மேலும் அதனைத்தொடர்ந்து, இரண்டு தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களான 641 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 349 பள்ளிகளில் பொது மக்களின் பார்வைக்காக சிறப்பு சுருக்கமுறை திருத்த இறுதிப்பட்டியலை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ் வாக்காளர் பட்டியலானது, ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் உள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் 2024னை பொதுமக்கள் பார்வையிட்டு பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் போன்ற விவரங்களை அறிந்துக்கொள்ளலாம் என பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியல் 2024-ன்படி பொன்னேரி கோட்டத்தில் உள்ள 2 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 001.கும்மிடிபூண்டி வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை-330, ஆண்கள்-132777, பெண்கள்-139802, மாற்று பாலினத்தவர்-43, மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 2,72,622 ஆகும்.

அதுப்போன்று, 002.பொன்னேரி தனி தொகுதி மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை-311, ஆண்கள்-125362, பெண்கள்-131296, மாற்று பாலினத்தவர்-29, என ஆகமொத்தம் வாக்களர்களின் எண்ணிக்கை -2,56,687 என பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இறுதி வாக்களர்கள் இரு தொகுதிகளையும் சேர்த்து மொத்த எண்ணிக்கை- 641, மொத்த ஆண்கள்-258139, மொத்த பெண்கள்- 271098, மொத்த மாற்று பாலினத்தவர்-72, மொத்த வாக்காளர்கள்- 5,29,309 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாக்காளர் பட்டியலை, பொன்னேரி சாராட்சியார் வாகே சங்கெத் பல்வந்த் பொதுமக்களுக்கு வழங்கி அதில் பொது மக்களின் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை கேட்டறிந்தார். தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள மாதிரி தேர்தல் இயந்திரத்தில் எவ்வாறு வாக்கு செலுத்துவது என்பது குறித்த விளக்கமும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வாக்காளர்கள் வாக்கு செலுத்தினர். இந்நிகழ்வில் பொன்னேரி தேர்தல் அலுவலர் கனகவல்லி, கும்மிடிப்பூண்டி தேர்தல் அலுவலர் கந்தசாமி மற்றும் பாரதி உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here