திருவள்ளூர், ஏப். 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..

திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், பாதுகாப்புடனும் வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், தேர்தல் அதிகாரி 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை   வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைத்துள்ளனர்.

அதில் டெப்டி கமாண்டர் தலைமையில் இரண்டு காவல் ஆய்வாளர்களையும் இரண்டு உதவி ஆய்வாளர்களையும் மற்றும் 87 கமாண்டர்கள் மத்திய தொழிற்பாதுகாப்பு வீரர்கள் கொண்ட குழுவானது கனகவல்லிபுரம் பயிற்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 100 சதவீதம் வாக்குகளை அளிக்க வேண்டும் என்ற விதத்தில் 92 பேர் கொண்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களும் 30 பேர் கொண்ட தமிழ்நாடு காவலர்களும் இணைந்து திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் தொடங்கி ரயில் நிலையம் வரை தேர்தல் விழிப்புணர்வு அணி வகுப்பினை பாண்டு வாத்தியங்கள் முழங்க நடத்தினர்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here