சத்திரப்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள வீரலப்பட்டி காலனியைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மகள் தீபிகா (வயது23). இவர் எம்.காம்.சி.ஏ. படித்துள்ளார். பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தொப்பம்பட்டி அருகே தேவத்தூர் கப்பலப்பட்டியை சேர்ந்த கோபி (23). இவர்கள் 2 பேரும் அம்பிளிக்கையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்தனர். அப்போது இவர்களிடையே காதல் ஏற்பட்டது.

இந்த விசயம் பெற்றோருக்கு தெரியவந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பு பெற்றோரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த காதலர்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் வடகாடு மலைப்பகுதியில் எல்லைக்கருப்பணசாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

எனினும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு 2 பேரும் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தீபிகா மேஜர் என்பதால் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால் போலீசார் இருவரையும் அனுப்பி வைத்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here