திருவள்ளூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அடுத்த வள்ளுவர் புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்- சசிகலா தம்பதியினரின் மகன் சந்தோஷ். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதேப் போல் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரபா தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகள் பூவிழி தனியார் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
மேலும் அவர்கள் இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூ விழிக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்ததால் பூவிழி, சந்தோஷ், இருவரும் திருவள்ளூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு எஸ் பி அலுவலகத்தில் அக் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
அதனை தொடர்ந்து எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கள பிரியா இரு வீட்டாரையும் அழைத்து சமரசப்படுத்தினார். அப்போது பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி காதலன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதனால் அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.






















