கும்பகோணம், டிச. 13 –

கோட்டாட்சியர் அலுவலகம் முன்னின்று தாறுமாறாக உயர்ந்துள்ள பொட்டாஷ்,  டிஏபி உர விலைகளை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்திட கோரியும், தட்டுப்பாடு இன்றி, எல்லா இடங்களிலும் போதுமான அளவிற்கு உரங்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விவசாயிகள் காலி உரப்பைகளை தலைகளில் அணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும், அதிகபட்ச சில்லரை விலையை காட்டிலும், பலமடங்கு கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கோரியும் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு,  ஏராளமான விவசாயிகள் காலி உர சாக்குகளை தலையில் கவிழ்த்துக் கொண்டும், கண்களில் கருப்புத்துணியால் மறைத்துக் கொண்டும் நூதன முறையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.  

விவசாயிகளுக்கு தேவையான பொட்டாஷ் மற்றும் டிஏபி உரங்கள் தமிழகம் முழுவதும் உள்ள 8,400க்கும் மேற்பட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் உரங்கள் கையிருப்பு இல்லை, இதனை பயன்படுத்திக் கொண்டு கள்ளசந்தையில் உரங்களை பதுக்கி வைத்துக் கொண்டு, தனியார் நிறுவனங்கள், ரூபாய் 1040 மதிப்பிலான பொட்டாஷ் உரங்களை, ரூபாய் 1700 வரை விற்பனை செய்கின்றனர்.

எனவே கள்ளச்சந்தையில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது வேளாண்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  உர விலைகளை கட்டுப்படுத்திட மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், தட்டுப்பாடு இன்றி அனைத்து இடங்களிலும் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை கிடைக்க செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, இன்று கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, ஏராளமான விவசாயிகள் திரண்டு தலையில் காலி உர சாக்குகைளை கவிழ்த்துக் கொண்டும், கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டும், நூதனமுறையில், கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 

    பேட்டி : சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், செயலாளர்,

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச்சங்கம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here