பொன்னேரி, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிடக்கோரி திருவள்ளூர் வடக்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா தலைமையில் பொன்னேரி அண்ணா சிலை அருகே கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் திட்ட பணிகள் முடிவடையாத நிலையில் இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் நகராட்சியின் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது எனவும், மேலும் தாயுமான் செட்டி தெருவில் கடந்த வடகிழக்கு பருவ மழையால் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது எனவும், பொன்னேரி-மீஞ்சூர் இடையே உள்ள திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதாலும் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது எனவும் அப்பகுதிகளில் உள்ள தரமற்ற சாலைகளைச் சுட்டிக் காட்டி கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்ட புரட்சி பாரத கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.