கும்பகோணம், ஜூலை. 15 –

கும்பகோணம் மாநகரத்திலுள்ள மோதிலால் தெருவில், பிரபல மளிகை பொருட்கள் விற்பனை செய்யும், தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது.

இந்நிலையில் இந்த அங்காடியில் அப்பகுதியில் வசித்து வரும் அக்கடை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை போன் மூலம் ஆர்டர் செய்வதும், அதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் சார்பில் அக்கடை ஊழியர்கள் மூலம் அவ்வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று பொருட்களை வழங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வழக்கம் போல், நேற்று முன்தினம் சூப்பர் மார்க்கெட் மேலாளருக்கு போன் மூலம் எங்களுக்கு 7 மூட்டை அரிசி தேவைப்படுகிறது. எனவும், மேலும் அந்நபர் ஒருக் குறிப்பிட்ட முகவரியை தெரிவித்து அங்கு உடனடியாக பொருளை வழங்கிடுமாறு தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, அக்கடையைச் சேர்ந்த 2 சேல்ஸ்மேன்கள் மூலம் கடையின் மேலாளர் 7 மூட்டை அரிசியை இருசக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள பந்தடி மேடை அருகே காத்தாயி அம்மன், பின்புறம் நின்று கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் 6 மூட்டை அரிசியை இங்கே இறக்கி விடுங்கள் மேலும் ஒரு  மூட்டையை பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜான் செல்வராஜ் நகரில் உள்ள எனது நண்பர் வீட்டில் இறக்கி விட்டு வாருங்கள் அங்கேயே உங்களுக்கு பணம் செலுத்தி விடுவார்கள் எனத்தெரிவித்துள்ளார்.

அதன்படி அக்கடை சேல்ஸ் மேன்கள் அந் நபர் தெரிவித்த விலசாத்திற்கு ஒரு மூட்டை அரிசியை இறக்கி வைப்பதற்காக ஜான் செல்வராஜ் நகருக்கு சென்றுள்ளார். ஆனால், அடையாளம் தெரியாத நபர் கொடுத்த விலாசம் அப்பகுதியில் இல்லை என்பதை அறிந்த சேல்ஸ்மேன்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அரிசி மூட்டையை இறக்கி வைத்த  இடத்திற்கு மீண்டும் அங்கு வந்துள்ளனர்.

ஆனால்  இறக்கி வைத்த அரிசி மூட்டையும் மர்ம ஆசாமியும் காணவில்லை. அதுக் குறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பக்ருதீனிடம், ஏமாற்றம் அடைந்தது பற்றி  தெரிவித்தனர்.

உடனடியாக மேற்கு காவல் நிலையத்தில் பக்ருதீன் புகார் அளித்தார்.புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல்  நூதன முறையில் வணிகர்களிடம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வியாபாரம் செய்ய சில்லறை காசு எங்களிடம் உள்ளது. சுவாமிமலை கோவிலுக்கு வாருங்கள் என்று கூறி வரவழைத்து வணிகர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து மர்ம நபர்கள் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்

இது குறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்டபோது, கோவிலில்  வரும் காணிக்கை காசுகள் நேரடியாக வங்கிக்கு சென்று விடும் வெளியில் யாருக்கும் கொடுக்கமாட்டோம் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வணிகர்கள் தெரிவித்த போது பல்வேறு விதங்களில் ஏமாற்றும் தில்லு முல்லு வேலைகளை செய்யும் நபர்களை காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here