தஞ்சாவூர், ஏப். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

டிராக்டர் உள்ளிட்ட  உழவு இயந்திரங்கள் மூலம் “நல்லேறு உழுது” மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து  உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள்.

சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள் பார்த்து தங்கள் விளை நிலங்களில்  நல்லேறு பூட்டி சிறப்பு பூஜைகளுடன் வேளாண் பணிகளை துவக்கி வருகின்றனர்.

அதுபோல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்துள்ள பருத்திக்குடி   கிராமத்தில்  அப்பகுதி விவசாயிகள்  விதை நெல்லுடன்  தேங்காய் பழம் படைத்து சூரியனையும்,  காவிரி தாயையும்  வணங்கி  டிராக்டர் உள்ளிட்ட  உழவு இயந்திரங்களுக்கு பூஜைகள் செய்து நல்லேறு உழுது  விதை நெல்லை விளை நிலங்களில் தெளித்து குறுவை நெல் சாகுபடிக்கான பணிகளை துவக்கினர்.

இந்தாண்டு காவிரியில் தங்கு தடையின்றி தண்ணீர் வரத்தும், இயற்கை இடர்பாடுகள் இன்றி முப்போகம் சாகுபடி விளைய வேண்டும் என்றவாறு விவசாயிகள் வழிப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here