பட்டுக்கோட்டை, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
ஒட்டுப் போட்டு வெற்றி பெற செய்த கிராம மக்களுக்கு கோடைகாலத்தில் தன்னுடைய சொந்த செலவில் சுமார் 12 லட்சம் மதிப்புள்ள புதிய குடிநீர் வாகனம் வாங்கி வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கும் ஊராட்சி மன்ற தலைவி செயலை அப்பகுதி மக்கள் மனதாரப் பாரட்டுகின்றனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் போதுமான மழை இல்லாமல் ஏரி, குளங்கள் அனைத்தும் வறண்ட நிலையில் காணப்படுகிறது.
அதனால் தண்ணிர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படும் நிலையில் கரம்பயம் ஊராட்சி மன்ற தலைவி மேனகா ஆனந்த்குமார் கோடைகாலத்தில் மக்கள் பயன் பெரும் வகையில் கரம்பயம் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல், அமைத்தும் வீடுகளுக்கு குடிநீர் வழங்க அவருடைய சொந்த செலவில் 12 லட்சம் மதிப்புள்ள புதிய வாகணம் வாங்கி அதில் தண்ணிர் நிரப்பி வீடு வீடாக தேடி சென்று தண்ணீர் வழங்கியும் வருகிறார்.
இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடயே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக கரம்பயம் பேருந்து நிலையம் அருகில் ஊராட்சி மன்ற தலைவி மேனகா ஆனந்த்குமாரால் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்ரமணியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், குடி நீர் வழங்கும் வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்,
அதில் ஒன்றிய கழக செயலாளர்கள் பார்த்திபன், இராமநாதன், நகர கழக செயலாளர் செந்தில்குமார் மற்றும் திமுக ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.





















