திருவள்ளூர், பிப். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்மாறன் …

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமையில் நடைப்பெற்ற  அக்கூட்டத்திற்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து அக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய அமைச்சர் காந்தி …

மாவட்ட கவுன்சிலர் உங்கள் பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை அறிந்தும் உணர்ந்தும் அது எத்துறை சம்பந்தப் பட்ட தேவைகளாக இருந்தாலும், அதுக்குறித்து திட்டங்களை வகுத்துக் கொடுக்க வேண்டும் எனவும், மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமே தெரியும் மக்களின் அடிப்படைத் தேவகள் என்னவென்பது, ஏனெனில் அவர்கள்தான் மக்களோட மக்களா இருக்காங்க எனவும் மேலும் மக்களும் அவர்களிடம்தான் தங்களின் கஷ்ட நஷ்டங்கள் உரிமையுடன் தெரிவிப்பார்கள் என்றார்.

அதனால் அப்பகுதி வாழ் மக்களின் தேவைகள் என்ன என்பதை கேட்டறிந்து அதனை திட்டக்குழு உறுப்பினர்களான உங்ககிட்ட தான் சொல்லுவாங்க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும்.

 

இந்த கூட்டமானது அனைத்து துறைக்கும் பொதுவாக இருக்கும். திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் அதை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து உரிய விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற அமைச்சர் இந்த கூட்டத்தின் மூலம் யாராக இருந்தாலும் உங்கள் பகுதி மக்களின் கோரிக்கை என்னவென்று மனுவாகக் கொடுங்கள் எனவும் அதனை நாங்கள் அதை பரிசீலனை செய்து நாங்கள் பொறுப்போடு செயலாற்றுவோம் என்று தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,இங்கு பல்வேறு திட்டங்கள் உடைய நிலை குறித்து அவை எந்த அளவுக்கு மக்களின் நலனை தேடி காப்பாற்றி இருக்கும் குறித்தும் ஆய்வு செய்வதற்கும் அதை தாண்டி அவற்றில் உள்ள குறைகளை கலைத்து அவற்றை எப்படி சிறப்பாக செய்வது என்பதற்கு இந்த மாவட்ட அளவிலான குழு கூட்டத்தின் உடைய நோக்கம் முக்கியமானது என்று கூறினார்.

 

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங் மற்றும் திட்ட குழு உறுப்பினர்கள்,  ஒன்றிய குழு தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here