காஞ்சிபுரம், மார்ச். 16 –
தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு பங்கேற்க்கும் ஆய்வு கூட்டம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தமிழக காவல்துறை இயக்குனர் டி.ஜி.பி சைலேந்திரபாபு காஞ்சிபுரத்திற்க்கு வருகை தந்தார். அப்போது காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் வடக்கு மண்டலம், காவல்துறை துணைத் தலைவர் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பார்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், பயிற்சி உதவி கண்காணிப்பாளர், கலந்துக்கொண்டனர்
குற்றங்களை தடுப்பதற்க்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அதனை மேம்படுத்துவது குறித்தும், பழைய குற்றங்களை கண்டுபிடிப்பதற்க்காக மூன்று மாவட்டங்களில் மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் அதற்கான வழிகாட்டும் ஆலோசனைகளும், சட்டம் ஒழுங்கினை பேணிக்காத்திட ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது முழு வீச்சில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரபடுத்துதல், பொதுமக்கள் கொடுக்கப்படும் புகாரின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களின் குறைகளை கலைய எடுக்கப்பட்ட செயற்பாடுகள் குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் காஞ்சிபுரம் சரகத்தில் போதைப்பொருள் கடத்தல், சட்டம் ஒருங்கினை பேணிக்காத்தல் மற்றும் சவாலான குற்ற வழக்குகளில் தீவிர முயற்சி எடுத்து கண்டுபிடித்தல் போன்ற பணிகளில் அர்பணிப்பு உணர்வுடன் நற்செயலாற்றிய 10 குழுக்களை சார்ந்த சிறந்த காவலர்களுக்கு ரொக்க வெகுமதி அளித்து பாராட்டினார்.
























