இராசிபுரம், மே. 23 –
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில் நூல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் S.B. மாதேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் SNKP.செல்வம் முன்னிலை வகித்தார்.
நூல் விலையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் S.B.மாதேஸ்வரன் கூறிகையில்,
நாமக்கல் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி நெசவு தொழில் உள்ளது. இத்தொழிலுக்கு தேவையான பருத்தி நூல் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.
40 நெம்பர் நூல் 500 கிலோ எடை கொண்டது ௫.9 ஆயிரமாக இருந்து வந்தது, அது கடந்த 6 மாதங்களில் படிப்படியாக விலை உயர்ந்து ரூ. 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால் விசைத்தரியாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்து தொழிலை தொடர முடியாத நிலை உள்ளது. எனவே நூல் விலையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.























