திருவள்ளூர், நவ. 23 –
சேலம் மாவட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் டிசம்பர் மாதம் நடைப்பெறயிருக்கும், 2வது மாநாட்டினை முன்னிட்டு அவ்வணியின் தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருசக்கர விழிப்புணர்வு பேரணியை கன்னியாகுமரியில் துவக்கிவைத்தார். அப்பேரணியானது இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து அக்குழுவினருக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் லோகேஷ் ஆகியோர் தலைமையில் திமுகவினர் ஊத்துக்கோட்டை எல்லையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அப்பேரணியானது சோழவரம் வடக்கு ஒன்றியம், ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை, தச்சூர், மற்றும் மாதவரம் வழியாக வருகை தந்தது அப்போது அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொன்னேரி நகராட்சியில் நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் மீஞ்சூரில் பேரூர் கழக செயலாளர் தமிழ்உதயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்த 70 இளைஞர் அணியினருக்கு, அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
பின்னர் மீஞ்சூர் பேரூராட்சி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணா, பெரியார்,சிலைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர்,வாகன ஓட்டிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது. இறுதியாக மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் வல்லூர் இணைப்புசாலை பட்ட மந்திரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பகலவன், கதிரவன், முரளிதரன், வல்லூர் தமிழரசன், அலெக்சாண்டர், டாக்டர் மா.தீபன், பழவை முகம்மதுஅலவி, கன்னி முத்து உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் உடன் இருந்தனர்.