திருவாரூர், ஜூலை. 15 –

இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக திருவாரூர் இராம்கோ நகராட்சி தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ படத்திற்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்எம்பி.துரைவேலன் , மாவட்ட பொதுச் செயலாளர் அன்புவே.வீரமணி, மாவட்டசெயலாளர் சிட்டுபாஸ்கர் , நகர தலைவர் அருள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ , மாணவிகளுக்கு நோட்டு , புத்தகம் , பேனா  உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கினர். இந்நிகழ்வில்    காங்கிரஸ் மாவட்ட நகர ,வட்டார  நிர்வாகிகள் மற்றும் தலைமை ஆசிரியர் , ஆசிரியைகள் , மாணவ ,மாணவிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here