ஊத்துக்கோட்டை, மார்ச். 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி …

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் இந்தியா கூட்டணிக் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் ஆதரித்து கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) (விடுதலை) சார்பில் நடைப்பெற்ற தேர்தல் ஊழியர் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

மேலும் அக்கூட்டம் ஊத்துக்கோட்டையில் சி.பி.ஐ.எம்.எல். கட்சி அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அன்பு தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் இருந்து சி.பி.ஐ.எம்.எல். விடுதலைப் பொறுப்பாளர்களும் கட்சி உறுப்பினர்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here