மீஞ்சூர், டிச. 20 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மை குழு சார்பில் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நம் பள்ளி நம் பெருமை நமது ஊராட்சி என்ற தலைப்பில் பயிற்சி கூட்டம் மீஞ்சூர் வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில் கருத்தாளர்கள் ராம்குமார். நரசிம்மன். மாலினி .பத்மினி. ஆய பயிற்சியாளர் செந்தில் ஆனந்த் ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றியத்தில் அடங்கிய 30-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு சார்பில் முழு முதல் கல்விக்கான முயற்சிகளையும் கிராம மக்களுக்கு எளிதாக கல்வியறிவு பெற்றிட வழிவகை செய்வதற்கான நடைமுறைகளையும் அதற்கு ஏதுவான முறைகளையும் குறித்து பயிற்சியினை அளித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here