திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் முன்பாக மக்கள் தேசம் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பால்ராஜ் பறையனார் மற்றும் வழக்கறிஞர் மகேந்திரன் தலமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரச்சினைகளில் அலட்சியப் போக்குடன் நடந்துக் கொள்ளும் அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்திடக்கோரி முழக்கங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். திருத்தணி கோட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் மின்சாரத்துறை இளநிலை பொறியாளர் ஆகிய அதிகாரிகள் பொதுமக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் முறையாக செயல்படாத அதிகாரிகளை மாற்ற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். இப்போராட்டத்தில் ஆண் பெண் என்று பலர் கலந்துக்கொண்டனர். பின்னர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதன் பின்னர் மக்கள் தேசம் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு நிறைவு செய்தனர்.