திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பழங்குடியினருக்கு 63 வீடுகள் கட்டி தர மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பழங்கோவில், சிறுவள்ளூர் ஆகிய கிராமங்களில் வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 50 பயனாளிகளுக்கு பட்டா வந்த பிறகு வீடு கட்டும் பணிகள் தொடங்கப் படவுள்ளது. இந் நிலையில் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பழங்கோவில், சிறுவள்ளூர் ஆகிய கிராமங்களில் பழங்குடியினருக்கு வீடு கட்டும் பணிகளை ஆணையாளர் ஏ.எஸ்.லட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்குமாறு பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, பணி மேற்பார்வையாளர் மோகன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.