ஆவடி;ஜூலை,8-
ஸ்மார்ட் இந்தியா ஹாகத்தான் 2019 (வன்பொருள் பதிப்பு) சென்னை ஆவடி வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொழில்நுட்ப அறிவியல் கழகத்தில் (வேல் டெக் பல்கலைகழகம்) இன்று 8.07.2019 துவங்கியது. துவக்க விழாவிற்க்கு பல்கலைக்கழக நிறுவனர்கள் தலைவர் வேல் டாக்டர் R.ரங்ரராஜன் தலைவி திருமதி.டாக்டர் சகுந்தலா ரங்கராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர் டெக்கான் ஆட்டோ லிமிட்டட் நிறுவன ஆலைத்தலைவர் Y.ராமாராவ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு குத்துவிளக் கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். முன்னதாக வேல் டெக் துணைவேந்தர் டாக்டர் VSS குமார் வரவேற் புரையாற்றினார். துவக்க விழாவில் AICTE, MHRD, தொழில் நிறுவனங்களின் பார்வையாளர்களும் வேல் டெக் இயக்குனர்களும் பேராசிரியர்களும் கலந்துக் கொண்டனர்.
அகில இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் சுமார் 2 லட்சம் மாணக்கர்கள் கலந்து கொண்டனர். நேற்று துவங்கிய இதன் இறுதிப் போட்டியில் 178 கல்வி நிறுவனங்களை சார்ந்த 250 குழுக்களாக சுமார் 2000 மாணக்கர்கள் 9 மாநிலங்களில் உள்ள 18 மையங்களில் கலந்துக் கொள்கின்றனர். டெல்லி மையத்திலிருந்து காணொலி காட்சிமூலம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டார்டர். ரமேஷ் போக்ரியால், இணையமைச்சர் திரு.சஞ்ஜை சாம்ராள் தோத்ரே AICTE தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ர புத்தே ஆகியோர் துவக்கிவைத்னர். உடன் திரு.சுக்பீர் சிங் CVO. MHRD, டாக்டர். ஆனந்த் தேஷ்பாண்டே, தலைவர் பிரசிடண்ட் சிஸ்டம் லிமிடெட் டாக்டர். அபைய் ஜெரி, கண்டுபிடிப்புகள் துறை தலைவர் MHRD ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் திருமதி சகுந்தலா ரங்ரராஜன் பேசும் போது மாண்புமிகு பாரதப்பிரதமர் மோடி அவர்களின் மேக் இன் இந்தியா திட்டத்திற்க்கு வலு சேர்க்கும் விதமாக நடை பெறும் இப்போட்டிகளை வேல் டெக்கில் நடத்துவது பெருமையாக உள்ளது எனவும் வாய்பை வழங்கிய AICTE மற்றும் MHRD க்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.