பொன்னேரி, ஆக. 28

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் தினந்தோறும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சார் ஆட்சியருக்கு புகார்கள் வந்த நிலையில், நேற்று திடீர் என அம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார்.

மருத்துவமனையின் கட்டமைப்பு, புற மற்றும் உள் நோயாளிகள் பிரிவு, சமையல் கூடம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டும் மற்றும் அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டும் ஆலோசனைகளை வழங்கி கோட்டாட்சியர் ஆய்வு மேற் கொண்டார்.

மேலும் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் பெண்களிடம் கோட்டாட்சியர் நலம் விசாரித்தார். தொடர்ந்து அவர்களிடம் மருத்துவ வசதிகள் மற்றும் வழங்கப்படும்  சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும், பெண்கள் கோட்டாட்சியரிடம், சில முக்கிய மருத்துவ பரிசோதனைகளை வெளியே உள்ள மருத்துவமனைகளில் எடுத்து வரச் சொல்லி மருத்துவர்கள் வலியுறுத்தியதாகவும் அதனால்  பணம் செலவு செய்து சில பரிசோதனைகளை வெளியே எடுத்து வந்ததாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

அதனால் அதிர்ச்சியடைந்த சாராட்சியார் ஐஸ்வர்யா ராமநாதன் அருகில் இருந்த மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் அசோகன் உள்ளிட்ட மருத்துவர்களை எதற்காக வெளியே டெஸ்ட் எடுக்க அனுப்பினீர்கள் என கேட்டார். மருத்துவர்கள் மழுப்பவே மீண்டும் சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் டெஸ்ட்டுக்கு வெளியே சென்றீர்களா என கேட்க அவரும் ஆமாம் என உறுதி செய்த சாராட்சியர் மருத்துவர்களுக்கு கண்டிப்புடன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி மேலும் இதுப்போன்று மீண்டு நடைப்பெறாதவாறு பார்த்துக்கொள்ளும் படி அறிவுறுத்தினார்.

அதனால் அம் மருத்துவமனை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சாராட்சியர் மேற்கொண்ட அவ்வாய்வின் போது மாவட்ட சுகாதார துறை துனை இயக்குநர் சேகர், பொன்னோரி நகராட்சி ஆனையர் கோபிநாத், நகராட்சி தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், வார்டு உறுப்பினர்கள் உமாபதி, நல்லசிவம், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here