அம்மையார்குப்பம், ஜன. 15 –

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மையார் குப்பத்தில்  அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு படவட்டம்மன் கோயில் காமாட்சி அம்மன்  சாமி வீதிவுலா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அம்மையார் குப்பத்தில் எழுந்தருளிவுள்ள அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு படவட்டம்மன் காமாட்சியம்மன் கோயில்களில் எழுந்தருளியுள்ள சாமிகளின் வீதிவுலா நேற்று தை பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைப்பெற்றது.

முன்பாக சாமிகளுக்கு பல்வேறு பூக்கள் கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கு மற்றும் வாகனங்களில் வைத்து அக்கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகள் வழியாக ஊர்வலமாக சாமியை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அவ்வூர் பொதுமக்கள் சாமிக்கு மலர் மாலை அணிவித்தும், மற்றும் தேங்காய் பழங்கள் படைத்து கற்பூர தீபாதாரனை காட்டி சாமியை வழிப்பட்டனர். வீதிவுலா பணியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சி, அக்கிராமத்தில் ஒரு சிறிய திருவிழா போன்று காட்சி அளித்தது. இளைஞர், இளைஞிகள், மற்றும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள், குழந்தைகள் என அனைவரும் தை பொங்கல் புத்தாடை அணிந்து சாமியுடன் ஊர்வலத்துடன் நடந்து வந்தது. அப்பகுதி மக்களின் முகங்களில் ஒருவித புத்துணர்வை வெளிப்படுத்தியது.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here