கும்பகோணம், மார்ச். 29 –
கும்பகோணம் அருகே திருநறையூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் சனீஸ்வரபகவான் மந்தாதேவி, ஜெஷ்ட்டாதேவி என்ற இரு மனைவிகளோடும், மாந்தி மற்றும் குளிகன் என்ற தனது இரு மகன்களுடன் காகை வாகனம் மற்றும் கொடிமரம் பலி பீடங்களுடன் தனி சன்னதி கொண்டு குடும்ப சமைதமாக மங்கள சனி பகவானாக இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் என்பதும் மேலும் உலகிலயே இத்திருத்தலத்தில்தான் குடும்ப சமேதமாக சனீஷ்வரர் தனிச் சன்னதியில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதென இத்தல வரலாறி தெரிவிக்கிறது.
மேலும் இவ்வாலயத்தில் உலக மக்கள் நலம் பெற வேண்டி தசரத சக்கரவர்த்தி வழிபாடு செய்துள்ளார் எனவும், மேலும் அதேபோன்றே ராமபிரானும் ஆலயத்தில் வழிபாடு செய்துள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தேக் கொண்ட இத்திருக்கோவிலில் இன்று 29ஆம் தேதி மதியம் 1 மணி 6 நிமிடங்களை அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சியானது நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, இக்கோயிலில் சிறப்பு ஹோமம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை 30 ஆம் தேதி மாலை சனீஸ்வர பகவான் திருக்கல்யாணம் வீதி உலாவும் நடைபெறுகிறது.
இந்நிலையில் சனி பெயர்ச்சி முன்னிட்டு இன்று மங்கள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஹோமம், 108 கலச அபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெறுகிறது. மதியம் 1.06க்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது. இதில் ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீன ராசியினர், பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.





















