திருவாரூர், மார்ச். 27 –

திருவாரூரில் நேற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய DPC சுமைப்பணி  தொழிலாளர்களின் கோரிக்கை விளக்க மாநாடு நடைப்பெற்றது. அம்மாநாட்டில் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சுமைதூக்கும் பணியாற்றும் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர்.

மேலும் இம்மாநாட்டிற்கு சுமைப்பணி சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன் தலைமை வகித்தார், தஞ்சை மாவட்ட செயலாளர் த.முருகேசன் அனைவரையும் வரவேற்றார், சம்மேளன செயல் தலைவர் என்.குணசேகரன் துவக்க உரையாற்றினார். அவரைத் தெடர்ந்து, சம்மேளன தலைவர் ஆர். வெங்கடபதி சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்மொழிந்து உரை நிகழ்த்தினார்.

மேலும் கோரிக்கை விளக்க மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சிபிஎம் சட்டமன்ற குழுத்தலைவர் நாகை மாலி மற்றும் சம்மேளன பொதுச் செயலாளர் இரா.அருள்குமார் ஆகியோர் சிறப்பு மற்றும் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார்கள். மேலும் அதனைத் தொடர்ந்து சிஐடியு மாநில செயலாளர் சி.திருவேட்டை,  நிறைவுரை நிகழ்த்தினார்.

மேலும் இக்கோரிக்கை விளக்க மாநாட்டில், நுகர்பொருள் வாணிப கழக பணிகளை தனியார் மாயமாக்குவதை கைவிட வேண்டும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்,  சிப்பம் 1க்கு கூலி ரூ.30.00 வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இக்கோரிக்கை விளக்க மாநாட்டில், சிஐடியு மாநில செயலாளர் சி.ஜெயபால், சிஐடியு மாவட்ட செயலாளர்கள் திருவாரூர் டி.முருகையன், நாகை கே.தங்கமணி, மயிலாடுதுறை பி.மாரியப்பன், திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.கே.என்.அனிபா நிர்வாகிகள் எஸ்.வைத்தியநாதன், பி.என்.லெனின், சீனி.மணி, டி.வீரபாண்டியன் உள்ளிட்ட திரளானவர்கள் இக்கோரிக்கை விளக்க மாநாட்டில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here