கும்பகோணம், ஆக. 16 –
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் தமிழகம் முழுவதும் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். மேலும், கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு முன்னுரிமை வழங்கிடக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கும் போது, தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பதில் கால தாமதம் ஆக்க கூடாது எனவும், அவரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர் சட்ட வல்லுநர்களை கொண்டு கண்டிப்பாக இதற்கான நடவடிக்கை எடுப்போம் என்று முதலமைச்சர் கூறினார்.
மத்திய அரசிடம் கோரிக்கை வைக்காமலயே முன்னேறிய வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு 10% இடஒதுக்கீடு கிடைத்து உள்ளது. அதே போல சாதிவாரி கணக்கெடுப்பை அரசு முன்னெடுத்தால் எங்களுக்கான சமூக நீதி கிடைக்கும். எனவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக மத்திய மாநில அரசுகள் நடத்த வேண்டும். மேலும், கல்வி. வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.