பொன்னேரி, டிச. 26 –
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 99 வது பிறந்தநாளை நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக அனைத்து தரப்பினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக திருவள்ளூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் பல்வேறு இடங்களில் அவரின் பிறந்தநாளினைக் கொண்டாடும் விதமாக விழா எடுத்து நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், பொன்னேரி, தடப்பெரும்பாக்கம், கொடூர், பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் 99 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியின் துவக்கமாக மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையம் பஜாரில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் தலைமையில் வாஜ்பாயின் திருஉருவ படத்தினை நிறுவி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பாஜக கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
அதில் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பாபு, தனஞ்செழியன், குமார், நாகராஜ், பாபு, மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொன்னேரி, தடப்பெரும்பாக்கம் ,கொடூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட செயலாளர் நந்தன் தலைமையில் நிர்வாகிகள் சிவா ,மகேஸ்வரி, பாலாஜி, ரமேஷ் ,அத்திப்பட்டு திவாகர், தாமரை சோமு மற்றும் இளைஞர் அணி மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மீஞ்சூர் முப்பாத்தம்மன்கோவில் அருகே ஒன்றிய தலைவர் சிவராஜ் தலைமையில் பரமானந்தம், மணிகண்டன், தங்கமணி, ராஜமன்னார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாஜ்பாய் 99 வது பிறந்தநாளன்று அப்பகுதி வாழ் மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.




















