ஊத்துக்கோட்டை, ஏப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி…

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை இந்திய கூட்டணி கட்சியின் சார்பில், இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கை சின்னத்தில் வாக்களித்து ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரையிலான சைக்கிள் பேரணி நடைப்பெற்றது.

மேலும் அதில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென இந்திய கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) விடுதலை கட்சியினர் :ஈவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர். மேலும் இரு சக்ர வாகன பேரணி ஊத்துக்கோட்டை சிபிஐ எம்எல் கட்சி அலுவலத்தில் இருந்து பெரியபாளையம் வரை சென்று வாக்கு சேகரித்தினர்.

இருசக்கர வாகன பேரணியின் போது எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒலிபெருக்கி மூலம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அப்பேரணி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அன்பு தலைமையில் நடைபெற்றது. அதில் 15 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு மக்களிடையே வாக்கு சேகரித்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here