திருத்தணி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் மகேஷ் (30) இவர் தனது வீட்டின் அருகே கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை கோழிப்பண்ணை அருகே அரிய வகை ஆந்தை ஒன்று இருந்த்தைப் பார்த்த மகேஷ் ஆந்தையை பிடித்து பத்திரமாக வைத்தார்.
மேலும் அதுக்குறித்து திருத்தணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அதனைத் தொடர்ந்து அங்கு வந்த திருத்தணி வனச்சரகர் அருள் தலைமையிலான வனச்சரக அலுவலர்கள் அதனை மகேஷிடம் பெற்றுக்கொண்டு பின் அந்த ஆந்தை எந்த வகை ஆந்தை எந்த நாட்டில் அதிகம் காணப்படுகிறது. என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.





















