மெர்சல், தெறி படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி இணைந்திருக்கிறது. ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் பென்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது.
அடுத்த படியாக விஜய் – நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்க இருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினருடன் மார்ச் இரண்டாவது வாரத்தில் நயன்தாரா இணைய இருக்கிறார்.
இப்படத்தில் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் சூப்பர் சிங்கர் ஜூனியரில் புகழ் கபீஸ் பூவையார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.