மயிலாடுதுறை, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு துவங்கி தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அதிகபட்சமாக செம்பனார்கோயில் பகுதியில் சுமார் 8 சென்டிமீட்டர் மழையளவுப் பதிவாகிவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரிவரப் பொய்யாத நிலையில் கோடை வெப்பம் வாட்டி வந்தது. இந்நிலையில் தற்போது கோடை மழை வெளுத்து வாங்குகிறது.
நேற்று நள்ளிரவு துவங்கிய கனமழை விடாது விடிய விடிய தற்போது வரை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் கோடை காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பித்தது போல் பருவநிலை நிலவுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பனார்கோவில் பகுதியில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் மயிலாடுதுறையில் 55 மில்லி மீட்டர் மழையும் கொள்ளிடத்தில் 32 மில்லி மீட்டர் மழையும் மேலும் சீர்காழி உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் கோடை கால குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்பதைக் கருத்தில் கொண்டு அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.























